வயாகரா மாத்திரை – அடுத்த அசத்தல் கண்டுபிடிப்பு

வயாகரா மாத்திரை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உலகெங்கும் சுமார் மூன்று கோடிபேருக்கும் அதிகமாக அந்த மாத்திரையைப் பயன்படுத்தியுள்ளனர் என புள்ளி விவரங்கள் சொல்லிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் வந்திருக்கிறது அடுத்த அசத்தல் கண்டுபிடிப்பு. லிபிடோ இன்செக்ஷன் எனும் இந்த புதிய மருந்து வயாகராவைப் போல மேனியில் நேரடியாக மாற்றங்களை ஏற்படுத்தாமல் மூளையில் மாற்றத்தை ஏற்படுத்தி பாலியல் ஆர்வத்தையும், ஆரோக்கியத்தையும் தூண்டுகிறதாம்.
பாலியல் ஆர்வமின்மை இன்றைய அவசர யுகத்தில் சர்வ சாதாரணமாகிவிட்டது. மூன்றில் ஒரு பங்கு பெண்களும், ஆறில் ஒரு பங்கு ஆண்களும் இந்த ஆர்வமின்மை கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான வரப்பிரசாதம் இது என்கின்றனர் இந்த புதிய அதிசய மருந்து தயாரிப்பாளர்கள்.

Author: admin