முக்கியமான பாலியல் சந்தேகங்கள்

மாதவிலக்கு நின்ற பிறகு உடலுறவு வைத்துக் கொண்டால் வலி ஏற்படுவது ஏன்?
தாம்பத்ய உறவுக்கான ஆர்வத்தைத் தூண்டுவது ஹார்மோன்கள். வயதுக்கு வந்தது முதல் மெனோபாஸ் அடையும் வரை ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவு ஹார்மோன் சுரப்பு இருக்கும்.
மாதவிலக்கு நின்றதும், இந்த ஹார்மோனின் அளவு குறைவதால், செக்ஸில் ஆர்வம் குறைவதோடு பெண் உறுப்பின் பசைத்தன்மைக் குறைந்து இறுக்கமாகிவிடுகிறது. இதனால்தான் உறவின்போது வலியும், எரிச்சலும் ஏற்படுகிறது. மருந்து வகைகள், க்ரீம் போன்றவற்றின் மூலமாக இந்தக் குறைபாட்டை சரிசெய்ய முடியும். மருத்துவரை நேரடியாக அணுகி, அவர் பரிந்துரைக்கும் மருந்து வகைகளை உட்கொண்டால் நல்லது.
குள்ளமாயிருப்பது தாம்பத்தியத்தை பாதிக்குமா?
பெண்ணுக்கு 18, ஆணுக்கும் 20-22 வயதில் எலும்புகளின் வளர்ச்சி முழுமை பெறுகிறது. எனவே உயரம் அந்த வயதுக்குள் நிர்ணயமாகிவிடும். பரம்பரைவாகு என்ற ‘ஜீன்’களின் காரணமாக உயரம் அமைந்தாலும் சில உடற்பயிற்சிகளின் மூலம் ஒன்று அல்லது இரண்டு செண்டிமீட்டர் அதிகரிக்கலாம்.
அதுவும் 18 வயதுக்குள் மட்டுமே பயனளிக்கும். 18 வயதிற்க்கு மேல் உள்ளவர்களுக்கு பலனளிக்காது. இதற்கென மருந்து மாத்திரைகளும் இல்லை. உயரக் குறைவை கிண்டல் செய்பவர்களை பொருட்படுத்தாதீர்கள். மகிழ்ச்சியான தாம்பத்யம் கணவன் – மனைவி புரிதலில்தான் இருக்கிறது. உயரத்திலோ அல்லது உருவத்திலோ இல்லை.

Author: admin