நானும் அவன் உதட்டிலே திருப்பி அவன் செஞ்ச மாதிரி முத்தம் கொடுத்தேன்

நான் வேலை பார்த்த தொழிற்சாலையின் சேர்மன் தென் தமிழ் நாட்டைச்சார்ந்தவர். விருந்தோம்பலுக்கு பேர் பெற்றவர்களின் சமூகத்தைச் சேர்ந்தவர். அரச பரம்பரை. அவர்களுக்கு பர்மாவில் சொந்த தொழில் இருந்தது. பல ஏக்கர் விவசாய நிலங்களுக்குச் சொந்தக்காரர். பர்மாவின் பிரதமர் ஊநூவிடம் இருந்து ராணுவம் அரசாங்கத்தைக் கைபற்றியதும் இவரகள் வசம் இருந்த தொழில்களில் பாதிப்பு ஏற்பட்டது. நிலங்களும் பறிபோயின. அவர்களுக்கு ஒரு பயணிகள் கப்பல் சொந்தமாக இருந்தது. சிங்கப்பூர், மலேசியா, ஜாவாதீவுகள், என்று செல்லும் அந்த கப்பல் மாதம் ஒருமுறை பர்மாவிற்கும் செல்லும். ஒரு தடவை என்னை பர்மா சென்றுவருமாறு பணித்தார். அதிலும் கப்பலில் தான் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. பர்மாவுக்கும் இந்தியாவுக்கும் விமான போக்குவரத்து அந்த சமயத்தில் இல்லாமல் இருந்தது. உரம் சம்பந்தமான வியாபார ஒப்பந்தங்கள் போடுவதற்கும் , பர்மிய அரசுடன் பெட்டோரிலிய என்னை சுத்திகரிப்பு ஆலை நிறுவுவதற்கான தொடக்க பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் நான் செல்ல வேண்டியதிருந்தது.

Author: admin