தனக்கு பெரிய குஞ்சு இல்லை குட்டு வெளிப்பட்டு விடுமோ

வாத்திக்கு ரெம்ப நாளாக வீட்டுச்சாப்பாடு சாப்பிட்டு வாய் காரசாரமாக உணவு கேட்டது, வாத்தினியிடம் கேட்டதற்கு இந்த வயதிற்கு ஏற்ற உணவுதான் சாப்பிடனும், இஸ்டத்திற்கு சாப்பிட்டால் பின்னர் பிரச்சினை தான் என்று சொல்லி மறுத்து விட்டார். சரி காசாவது கொடு, நான் ஒட்டலுக்கு சென்று சாப்பிடுகிறேன் என்று கேட்டு தலையை சொறிந்து நின்றார். இதற்கெல்லாம் காசு கிடையாது, அவ்வளவு நாக்கு ருசி எடுத்து அலைந்தால் எங்காவது மூட்டை தூக்கி பணம் சம்பாரித்து அதில் உங்களுக்கு பிடித்ததை சாப்பிட்டுகொள்ளுங்கள் என்று பதில் வரவும் வாத்தி காண்டாயிட்டார். என்னை கிழவன் என்று நினைத்து தானே மூட்டை தூக்கி சம்பாரி என்கிறாள். சரி இது ஆண் இனத்தின் தன்மானதத்திற்கு இழுக்கு என்று வீட்டை விட்டு கிளம்பினார். நேராக அருகில் இருந்த லாரி செட்டிற்கு சென்றார். அங்கே சென்று சரக்கு இறக்க தயாராக இருந்த லாரியை கண்டு, மூட்டை இறக்கினால் எவ்வளவு தருவீர்கள் என்று எடுத்தவுடனே பேரம் பேசினார். தாத்தா இதெல்லாம் சாதாரண விசயம் இல்லை, ஏதோ வீட்டிலே கோவித்துக்கொண்டு வந்துட்டீங்க போல இந்தாங்க 5 ரூபாய், போய் பொரிகடலை வாங்கி சாப்பிட்டுக்கொண்டே வேடிக்கை பார்த்துட்டு இடத்தை காலி செய்யுங்கள் என்று நைந்து போன 5 ரூபாய் நோட்டு ஒன்று கொடுத்தார்கள். அதனை மறுப்பேதும் சொல்லாமல் வாங்கிய வாத்தி, இதே டெக்னிக்கை அடுத்தடுத்த லாரி செட்டிற்கு சென்று செய்தால் இன்று 50 ரூபாய் தேர்த்திடலாம் என்று யோசித்தவர், பின்னர் இந்த டெக்னிக்கை தினத்திற்கொரு நாள் வைத்துகொள்வோம், என்று முடிவு செய்து கொண்டார். இந்த 5ரூபாய்க்கு எந்த ஹோட்டலில் சாப்பாடு தருவான்?. எனவே, இதனை வைத்து பொடி பிரச்சினை தீர்ப்போம் என்று, அருகில் உள்ள பொடிமட்டை கடைக்கு சென்றவருக்கு வழக்கமாக 2 ரூபாய் பொடி தந்தவனிடம், “டேய், 5 ரூபாய்க்கு கொடு, இப்போ நானே சம்பாரிக்க ஆரம்பிச்சுட்டேன்” என்று கடைக்காரன் வாயை பிளக்க வைத்தார். இவனுக்கு எந்த கேனப்பயல் வேலை கொடுத்தான் என்று அவனுக்கு தெரிந்தவர்களை எல்லாம் பட்டியல் போட்டு யோசிக்க ஆரம்பித்து விட்டான்.
வாத்திக்கு மூக்குக்குள் பொடி செல்லவும், புத்துணர்வு பெற்றதை உணர்ந்தார், வழக்கமாக வருவதை விட கூட கொஞ்சம் வந்ததும் மூக்கு மூளையை நன்றாக தூண்டியது. வாத்தி போதை அடித்தவன் போன்ற நிலையை உணர்ந்தார். அப்படியே தள்ளாட்டம் போட்டு ரோட்டில் நடந்து கொண்டிருக்கையில், இரு சிறுவர்கள் கையிலே 50 ரூபாயை வைத்துக்கொண்டு ஒருவருக்கொருவர் கைப்பற்ற தெருவிலே உருண்டு பிரண்டு முயற்சித்து நோட்டு எட்ட விழுந்து கிடந்தது, வாத்தி நேராக சென்று அந்த நோட்டை கையில் எடுத்தார். உடனே இருவரும் சண்டையை விட்டு எழுந்தனர். தானே முதலில் கண்டதாக சொல்லி, பணத்தை கேட்டனர். வாத்தி சட்டைப்பையில் ரூபாயை வைத்தார். அதனைக்கண்ட சிறுவர்கள், இந்த தாத்தா நமக்குள் சண்டையை முடிக்க இன்னொரு 50 ரூபாய் அவர் பணம் எடுத்து ஆளுக்கு ஒரு 50 கொடுப்பார், இல்லாவிட்டால் 25ரூபாய் என சில்லைறையாகக்கூட மாற்றி தருவார் என்று அவரையே பார்த்தனர். வாத்தி அந்த இருவரையும் விரட்ட நினைத்தார். டேய் பசங்களா, அதோ அந்த தெரு முக்கிலே தெரிகிற கம்பத்தை யார் முதலில் தொட்டு வருகிறீர்களோ அவனுக்குத்தான் என்று அவர்கள் ஒட ஆரம்பித்ததும், வாத்தி எதிர் திசையில் நடக்க ஆரம்பித்தார்.

Author: admin