கல்யாணம் முடிந்து முதலிரவன்று தன்னையே அவனுக்கு விருந்தாய் தர

அந்த லண்டன் மாநகரின் அமைதியான தெருவில் அமைந்த ஆடம்பர ஹோட்டலின் நான்காவது தளத்தில் உள்ள 11வது ரூமில் நிர்மலாவும் சாண்டி என்கிற சந்தியாவும் அவசர அவசரமாய்க் கிளம்பிக்கொண்டிருந்தார்கள்.வடநாட்டுத்தோழி ஒருத்தியின் பார்ட்டி தரை தளத்தில். பார்ட்டிக்கு வருபவர்களில் சிலர் வெளியூரிலிருந்து வருகிறார்கள் என்பதால் நிர்மலா,சாண்டி உட்பட வெகு சிலருக்கு ரூம்கள் புக் செய்யப்பட்டிருந்ததன. உச்சி முதல் பாதம் வரை இழுத்துப்போர்த்திய சல்வார் அணிய எத்தனித்தவள்,சந்தியாவின் ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் பார்த்தவுடன் பார்ட்டியில் தன் மதிப்பு போய்விடுமோவென எண்ணி தானும் ஒரு ஃப்ராகிற்கு மாறினாள். 10
வயதாய் இருந்தபோது பிங்க் நிறத்தில் ஃப்ராக் போட்ட நியாபகம். அதற்கப்புறம் ஃப்ராக் போட வாய்ப்பு கிட்டவில்லை. நிர்மலா, இருக்கும் இடத்திற்கேற்றவாறு உடை அணிய வேண்டுமென்று தோழிகளுக்கெல்லாம் அட்வைஸ் செய்பவள்.கல்லூரி கலை நிகழ்ச்சிகளுக்கு வீட்டிலிருந்து சுடிதாரில் வந்து, காலேஜில் ஜீன்ஸுக்கு உடை மாற்றிக்கொள்ளும் ரகம்.
இந்த ஃப்ராக், நிர்மலாவின் காதலன் ரகு வாங்கிக்கொடுத்தது. இருவரும் பன்னாட்டு நிறுவனத்தில் வேலையில் இருப்பவர்கள்.
அவனும் பார்ட்டிக்கு வருகிறான் என்பதால் நிர்மலாவிடம் துள்ளல் அதிகம் இருந்தது. ரூமை லாக் செய்துவிட்டு, வெளியில் வந்த பின்பு உள்ளே மறந்து வைத்துவிட்ட மொபைல் ஃபோன் எடுக்க
மீண்டும் ரூமிற்குள் ஓடி, மறுபடி ரூமை லாக் செய்து, ஒரு வழியாகப் பெண்கள் இருவரும் பார்ட்டி நடக்கும் ஹோட்டல் வந்து சேர்ந்தனர். பார்ட்டி ஏற்கனவே தொடங்கி விட்டிருந்தது. ரகு ரெண்டாவது பெக்கை தொண்டைக்குள் இறக்கிக் கொண்டிருந்தபோது நிர்மலா அவன் அருகே அமர்ந்து ஹாய் சொன்னாள். பரஸ்பரம் இருவரும் கன்னங்கள் உரசிக்கொள்ள‌முத்தமிட்டுக்கொண்டனர். இந்தியாவில் இருந்தவரை, கை குலுக்கிக் கொள்வதோடு நின்றுவிடும். லண்டனில் இதெல்லாம் சகஜம் என்பதால், நிர்மலாவுக்கும் இது கனநேரத்தில் தொற்றிக்கொண்டது. வேற்று நாட்டில் காலடியெடுத்து வைத்த பிறகு அவள் பழக்கப்படுத்திக்கொண்ட பல செய்கைகளில் இதுவும் ஒன்று.
சுமாராக ஒரு 30 பேர் வந்திருந்தார்கள். மேடையில் மெல்லியதாய்,என்ரிக்கின் இசைஆல்பமும், பேயொன்ஸ் இசையும் சேர்ந்து சிந்தையை மயக்கிக்கொண்டிருந்தது. சந்தியாவும் தன் பங்குக்கு ஒரு பெரிய கோப்பையில் மது ஊற்றி, நிர்மலாவிற்கும் ஒன்று எடுத்துவந்தாள். நிர்மலாவிற்கு இதெல்லாம் பழக்கமில்லை என்பதால் முதலில் பெரிதாகத் தயங்கினாள். கூட வந்தவர்கள் ஒரு மாதிரியாகப் பார்க்கத்தொடங்க, அதற்குமேல் மறுத்தால் நன்றாக இருக்காதென்று வாங்கிக்கொண்டாள்.
சிறிது நேரத்தில் அடிவயிறு முட்டத்தொடங்க, ரகு ரெஸ்ட் ரூம் எங்கே எனக்கேட்டு லேசாகத் தள்ளாடியபடி சென்றுவிட்டான். திரைப்படங்களிலும்,அலுவலக பார்ட்டிகளில் அடுத்தவர் கைகளில் மட்டுமே பார்த்துப் பழக்கப்பட்ட மதுக்கோப்பை. அதிலும் இரண்டு வருடம் அவள் வேலை செய்த ப்ராஜெக்டில் ரீவ் என்கிற அமெரிக்கப் பெண்மணி ஸ்டைலாகக் குடிப்பாள். அலுவலகமே அவள் அழகில், நவீனத்தில், ப்ராஜெக்ட் நுணுக்கத்தையும், கோப்பையையும் ஒரே வேகத்தில் கையாளும் அழகில் மயங்கிப்போகும்.

Author: admin