உல்லாச உலகிற்கு கை பிடித்து கூட்டிப் போங்க

அனுபவம் புதுமை, அவளிடம் கண்டேன் இது சினிமாப் பாட்டு. சில ஆண்களுக்கு சுத்தமாக செக்ஸ் அனுபவமே இருக்காது. சங்கோஜப் பேர்வழிகளாக இருப்பார்கள். இந்தக் காலத்தில் கூடவா என்று ஆச்சரியப்படாதீர்கள், நிச்சயம் சில ஆண்கள் இப்படி இருக்கத்தான் செய்கிறார்கள்.. இப்படிப்பட்ட ஆண்களை எப்படி சமாளிப்பது என்பது அவர்களின் பெண் துணைகளுக்கு மிகவும் சவாலான வேலையாக மாறிப் போகிறது என்பது பலருக்கு தெரியாமல் கூட இருக்கலாம்… பரவாயில்லை இப்போது தெரிந்து கொள்ளுங்களேன்…
சின்னச் சின்ன ஐடியாக்களைக் கையாண்டால் அனுபவம் இல்லாத எப்படிபட்டவர்களையும் கூட  எக்ஸப்ர்ட்டாக மாற்ற முடியும்,
முதல் முறை செக்ஸ் உறவுக்குள் நுழையும் ஆண்களுக்கு ஏகப்பட்ட சந்தேகங்கள் வரும். ஏம்ப்பா நான் சரியாத்தானே பேசுறேன் என்று வடிவேலு பஞ்சாயத்தில் சங்கிலி முருகன் அடிக்கடி கேட்டுக் கொள்வதைப் போல, ஏம்மா நான் சரியாத்தானே பண்றேன், வலிக்குதா,இப்படித்தானே, இதுதானே என்று அடிக்கடி கேட்பார்கள் இப்படிப்பட்ட ஆண்கள்.இது பெண்களுக்கு எரிச்சலைக் கொடுக்கத்தான் செய்யும் என்பது நிதர்சன உண்மையாகும். எனவே இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்க்க சின்னச் சின்ன வேலைகளை பெண்கள் முன்கூட்டியே செய்ய வேண்டியது அவசியமாகிறது.

Author: admin