அந்த மெல்லிய காம்பை நசுக்கிப் பார்த்தேன்

சொட்டு சொட்டாய் விழ ஆரம்பித்த மழைத்துளிகள், சில நொடிகளிலேயே ‘சட சட சடவென’ பெருமழையாய் மாறின. வானத்தை யாரோ வாளால் கிழித்துவிட்ட மாதிரி, நீரை அள்ளித் தெளித்தது. நான் பைக்கை வீட்டுக்குள் செலுத்தி, போர்டிகோவிற்குள் நிறுத்துவதற்கு முன்பே, தெப்பலாய் நனைந்திருந்தேன். பைக்குக்கு ஸ்டேன்ட் போட்டுவிட்டு, வீட்டுக்கு பக்கவாட்டில் இருந்த படிக்கட்டில் ஏறி, என்னுடைய மாடி போர்ஷனுக்கு ஓடினேன். வாசலுக்கு வெளியில் இருந்த பூந்தொட்டியை தூக்கி, வீட்டு சாவியை தேடினேன். ஏமாந்தேன். சாவியை காணவில்லை. குழப்பமாக இருந்தது. திரும்பி வாசலை பார்க்க, கதவு திறந்திருந்தது தெரிந்தது. நான் இல்லாத நேரத்தில் வீட்டுக்குள் யார் நுழைந்தது..? திருடனாய் இருக்குமோ..? நான் மெல்ல மெல்ல ஒவ்வொரு அடியாய் எடுத்து வைத்து வீட்டுக்குள் நுழைந்தேன். ஹாலில் யாரையும் காணோம். மேலும் நடந்து கிச்சனுக்குள் எட்டிப் பார்த்தேன். வாஷ் பேசினுக்கு பக்கத்தில் மஹா நின்றிருந்தாள். என்னை பார்த்ததும், எளிறுகள் தெரிய ஏளனமாய் சிரித்தாள்.

Author: admin