இவை வெறும் வார்த்தைகளல்ல என் வாழ்க்கை. நான் வாசித்துவிட்டேன் நீங்களும் வாசிக்காதீர்கள் வாழ்ந்துபாருங்கள்.
அன்பு நண்பர்களே அருமை வாசகர்களே இது என் வாழ்வின் சம்பவம் முடிந்த வரை ஸ்வாரஸ்யமாய் சமர்பிக்கிறேன். உண்மை சில இடங்களில் கசப்பாக தான் இருக்கும் ஆதரவளிங்கள். ஆரம்பத்தில இருந்தே எனக்கு காக்கிச்சட்டை மீது காரணம் தெரியாத காழ்புணர்ச்சியும் வெறுப்பும் இருந்தது. அப்படி தான் அந்த அகிம்சைவாதியையும் காக்சிச்சட்டைக்குள் கண்டதால் ஆரம்பத்தில் மோதலாகி போனது. ஆனால் மோதல் தான் காதலுக்கு அடிதளம் என அவனை ஆரம்பத்தில் வெறுத்து தான் தெரிந்துக்கொண்டேன்.
எல்லா காக்கியுமே ஒரே மாதிரி தான் என எண்ணி எல்லாரயுமே வெறுத்தது தான் நான் பண்ண தவறாக கருதுகிறேன்.் சென்று அவனை சைட் அடிப்பேன். மாலையில் நகர மூலையில் நின்று பேருந்து நெறிசலில் அவன் மும்பரமாக டிராபிக் க்ளியர் பண்ணும் போதும் பானிபூரி கடையில் நின்று அவனை சைட் அடிப்பேன் இப்படி ஒவ்வொரு சம்பவத்திலும் அவனை அனுவனுவாக காதலித்தேன். வாழ்வே அவன் என உருகினேன். நான் மட்டுமல்ல அவனை காணும் ஒவ்வொருவரும் இப்படி தான் ஏங்குவர். செப்பில் செய்த சிலையாய் அவன் செந்நிற மேனி. அளவாய் நறுக்கிய வாசனை கேசம். அழகு முகம். முறுக்கு மீசை. அளவான இதழ்கள். பறந்த மார்பு. கச்சிதமான காக்கிச்சட்டை. முட்டிமோதும் ஆண்மை என அந்த அகிம்சைவாதியின் மேல் பித்தானேன். தினமும் இரவில் என் தனிமைக்கு அவனது நினைவுகளை துணையாக்கிக்கொண்டேன்.