சரி என்று நான் அந்த கம்பெனி பஸ் அலுவலக்திற்குள் சென்று அந்த பெண் ரிசர்வ் பண்ணிய தேதியில் பார்த்த போது, அவர்கள் ரிசர்வ் செய்த அத்தனை பேரும் வந்து விட்டார்கள். அந்த பெண் இந்த பஸ்ஸில் ரிசர்வ் பண்ணியிருக்க வாய்ப்பில்லை. வேண்டுமானால் அவளுக்கு சீட் ஏற்பாடு செய்கிறேன். பணம் கட்டி பயணம் செய்யட்டும். ரிசர்வ் பண்ணிய பஸ், தேதி விபரம் இல்லாமல் இந்த பஸ்ஸில் டிக்கெட் எடுக்காமல் அனுமதிக்க முடியாது என்று சொல்லிவிட, நானே என் செலவில் டிக்கெட் எடுத்து அந்த பெண்ணிடம் கொடுத்தேன். சரியாக என் மூன் சீட்டில் அவள் ஏறி அமர்ந்து கொள்ள பஸ்ஸும் கிளம்பியது.
அவள் அடிக்கடி பின்னால் திரும்பி எனக்கு தேங்க்ஸ் சொல்லி கொண்டே வர, நான் அவளைப் பற்றி விசாரித்த போது திருச்சியில் தோழி வீட்டிற்கு பொங்கல் கொண்டாட போவதாக சொன்னாள். அவள் பெயர் ரோகிணி என்றாள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இருவரும் பேச ஆரம்பித்த போது அவள், என்னை பற்றியும் விசாரித்தாள். திருச்சியில் அவள் தோழி நம்பரும், முகவரியும் ஞாபகம் இல்லை அவர்களிடம் தொடர்பு கொள்ள முடியாது என்பதால் நானே அவள் ஏரியாவில் விட்டு விடுகிறேன் என்றேன். அவள் உடனே அவள் தோழியோட பெயரை சொல்லி பேஸ்புக்கில் அவளுக்கு தகவல் சொல்ல முடியுமா என்று கேட்டாள்.
நான் உடனே என் மொபைலில் ஃபேஸ்புக்கில் அவள் தோழியின் பெயர் ஐடியை தேடி அவளுக்கு மெசேஜ் செய்த போது உடனே என் போனுக்கு லைனில் வந்தாள். நான் அந்த போனை ரோகிணியிடம் கொடுத்த போது அழுது கொண்டே நடந்த கதைகளை சொன்னாள். பிறகு அவளே பஸ் எண், கிளம்பி நேரத்தை குறித்து கொண்டு அவளே பிக்அப் செய்து கொள்வதாகவும், கவலைபடாமல் வர சொல்லுங்கள். உங்கள் உதவிக்கு தேங்க்ஸ் என்று சொல்லி வைத்த பிறகு தான் எனக்கும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அதற்கு பிறகு தான் முன் சீட்டில் ரோகிணியும் தூங்க தொடங்கினாள்.