ரத்னா தேவிக்கு வயது முப்பத்தி எட்டு தான். சமூகத்தில் ஒரு பெரிய நிலையில் இருப்பவள். ………….பக்தி சமாஜத்தில் துணை தலைவி. ……………….. நகர் குடியிரோப்பர சங்கத்தில் பொருளாளர். உள்ளூர் கோவிலிலும் ஒரு பெரிய புள்ளி. வீட்டில் பூஜை புனஸ்காரம் உண்டு. மடி ஆச்சாரம் பலமாக இருக்கும். அந்த ஊருக்கு எந்த பெரிய ஆன்மீக வாதி வந்தாலும் ரத்னா வீட்டில் தான் தங்குவார்கள். தடா புடல் உபசாரம் பண்ணுவாள். அவள் தனியாகத்தான் இருக்கிறாள். கணவனை பற்றி சமாசாரம் யாருக்கும் தெரியாது. நெருங்கி பழகியவர்களுக்கு கூட தெரியாது. எங்கேயோ இருக்கிறார். அவரை பற்றி ஒன்றும் கேட்க வேண்டாம் என்று சொல்லிவிட்டாள் ரத்னா. அவளின் பண பலம், சமூக அந்தஸ்து கருதி யாரும் அவள் கணவனை பற்றி ஒன்றுமே கேட்க மாட்டார்கள். பட்டு புடவை கட்டிக்கொண்டு, தலை நிறைய மல்லிகை பூவை வைத்துகொண்டு, புடவை தலைப்பை நன்றாக இழுத்து போத்தி கொண்டு, ஸ்லோகம் சொல்லிக்கொண்டே கோவிலை பிரதக்ஷணம் வருவாள். பார்க்க மகாலட்சுமி மாதிரி இருப்பாள். அவளை பார்த்தாலே ஒரு தனி மரியாதை ஏற்படும்.