நாகநாதன் கமலா தம்பதிகள் சகல வசதிகளுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். ஒரே பெண் கல்யாணம் ஆகி, கணவனுடன் நெதர்லாந்தில் இருக்கிறாள். கமலா வீட்டில் செலவ செழிப்பு காணப்படும். சமையல் மாமி, தோட்டகாரன் அவன் மனைவி சுமதி வீட்டில் வேலைக்காரி, டிரைவர் சண்முகம் ஆகியோர் வீட்டோடு இருக்கிறார்கள். மாமியின் தூரத்து சொந்த பையன் – சாம்ப மூர்த்தியையும் மாமி தனக்கு உதவிக்காக வீட்டோடு வைத்து இருக்கிறாள். அவன் அதிகம் படித்தவன் இல்லை. சாமர்த்தியம் போறாது. சொன்ன வேலையை செய்வான். சரியாக சொல்ல போனால் அவன் அந்த வீட்டில் ஒரு எடு பிடி. இபப்டி இருப்பதால், வீட்டில் வேலை பார்க்கும் அத்தனைபேரும் கூட அவனிடம் கிண்டலாக பேசுவார்கள். வேலை வாங்கி கொள்ளுவார்கள். ஆனால் எல்லோரும் அவனிடம் அன்பும் செலுத்துவார்கள். கருணையும் காட்டுவார்கள். இப்போது நிகழ்ச்சிக்கு வருவோம். “டேய் சாம்பு எங்கேட தொலைந்து போயிட்டே. எத்தனை நாழியா நான் கத்தறேன். உன் காதில் விழவில்லை. சீக்கிரம் இங்கே வா” கத்தினாள் சமையல் மாமி சம்பூர்ணம்.