நவ்யா நாயரும் அவள் கணவன் பிரதீப்பும் கல்யாணத்திற்கு பிறகு லண்டனில் செட்டில் ஆயினர். இருவரும் இல்லறத்தில் திளைத்து நன்கு இன்பம் கண்டனர்.இருவரும் வீட்டின் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்ததால் சொந்தம் என்று யாரும் இல்லை. வீட்டில் இருவர் மட்டும் தான்.நவ்யா மற்றும் பிரதீப் பணக்கார குடும்பத்தில் பிறந்தவர்கள். வசதியாக வாழ்ந்து பழக்கப் பட்டவர்கள். ஆடம்பரமாக செலவு செய்தும் வாழ்ந்தவர்கள். பிரதீப் என்ன தான் நிறைய சம்பாதித்தாலும் அவர்கள் வாழ விரும்பிய ஆடம்பர வாழ்க்கைக்கு அது பத்தவில்லை. ஆகவே நவ்யாவும் வேலைக்கு போக முடிவு செய்தாள். இருவரும் சம்பாதிக்க ஆரம்பித்தனர். சொந்தமாக கடனுக்கு லண்டனில் ஆடம்பர வீடு வாங்கினர். மேலும் வீட்டுக்குத் தேவையான பொருட்கள் பலவற்றை மாதத் தவணையில் வாங்கி குவித்தனர். தினமும் பார்ட்டி,ஹோட்டல் என கிரெடிட் கார்டில் தேய்த்து தள்ளினர்.
இப்படி போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் திடீரென்று புயல் வீச ஆரம்பித்தது.உலகையை உலுக்கி கொண்டிருந்த பொருளாதார மந்தம் லண்டனில் மையம் கொள்ளத் தொடங்கியது. அதன் விளைவாக இருவரும் தங்கள் வேலையை இழந்தனர். வீட்டில் சேமிப்பு என்று எதுவும் இல்லாததால் அன்றாட சாப்பாடுக்கே ஏதாவது பொருளை விற்று வாழ்க்கையை தள்ளிக் கொண்டிருந்தனர். மேலும் வீட்டுக்காக வாங்கிய கடன் மற்றும் கிரெடிட் கார்டு என பல கடன்காரர்கள் தினமும் சண்டை போட்டுச் சென்றனர். வீடை விக்கலாம் என்றால் இன்றைய மார்க்கெட் நிலவரத்துக்கு அடிமாட்டு விலைக்கு தான் போகும் நிலைமை. சொந்தம் என்று யாரும் இல்லாததால் அவர்களிடமும் உதவி கேட்க முடியாத நிலை என வரிசையாக இடியாப்ப சிக்கலில் மாட்டிக் கொண்டனர்.முடிவாக கடன் கொடுத்தவர்கள் ஒரு மாத கெடு கொடுக்கிறார்கள். அதற்குள் பணம் செளுத்தவில்லைஎன்றால் கம்பி என்ன வேண்டியநிலை. கைது செய்யப்பட்டால் ஜாமீனில் எடுப்பதற்கும் ஆள் கிடையாது. வாழ்க்கையில் மீதி நாட்களை ஜெயிலிலேயே கழிக்க வேண்டிவரும்.