இது என்னுடைய சுயசரிதை.ஒரு தொடர் கதியாக வெளிவருகிறது தொடர்ந்து படித்து எனக்கு என் எழுத்து வடிவமைப்புக்கு உங்கள் விமர்சனத்தை எழுதுங்கள்
நானும் என் தங்கை கலைவாணியும் என் பெற்றோருடன் டெல்லிக்கு சுற்றுலா போயிருந்தோம் ஊர் சுற்றிவிட்டு திரும்பும் வழியில் நாங்கள் வந்த டாக்ஸி ஒரு லோரியோடன் மோதி விபத்துக்குள்ளானது. அதில் டாக்ஸி டிரைவரும் என் பெற்றோரும் துரதிர்ஷ்டவசமாக இறந்துவிட்டார்கள். அதிர்ஷ்டவசமாக நானும் என் தங்கை கலைவாணியும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினோம். அங்கிருந்தவர்களின் உதவியுடன் போஸ்ட்மார்டம் முடித்து போடிகளைஅங்கேயே புதைத்துவிட்டு நானும் என் தங்கையும் மட்டும் ஊர் திரும்பினோம். எனக்கு என் அப்பாவின் வாரிசு வேலை சில மாதங்கள் கழித்து E.B யில் கிளெர்க் போஸ்ட் கிடைத்தது. மேட்டூரில் வேலை. நானும் தங்கையும் மேட்டுருக்கு குடி போனோம். அங்கு எங்கள் சொந்தக்காரர்கள் யாரும் இல்லை.
நான் வேலைக்கு சென்று வரும் வரை என் தங்கை வீட்டில் சமையல் துணி துவைத்தல் மற்றும் அனைத்து வீட்டு வேலைகளும் முடித்துவிட்டு எனக்காக காத்திருப்பாள். நான் வீடு திரும்பியதும் இருவரும் சேர்ந்து சாப்பிட்டுவிட்டு T.V. பார்த்துக் கொண்டிருந்து விட்டு படுத்துக் கொள்வோம். இப்படியே சில மாதங்கள் ஆனது. ஒரு நாள் நான் என் தங்கையிடம் “ஏம்மா கலைவாணி, இப்படியே எத்தனை நாளைக்குத் தான் நீ தனியாக இருப்பாய், உனக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை பார்க்கட்டுமா?”, என்று கேட்டேன். அதற்கு அவள் “அண்ணா, நானும் அதே கேள்வியை உன்னை கேட்கிறேன், நீயும் எத்தனை நாள் பிரம்மச்சாரியாகவே இருப்பாய், நீ ஒரு நல்ல பெண்ணை பார்த்து ஏன் திருமணம் செய்து கொள்ளக்கூடாது?” என்று கேட்டாள்.