அன்று லிட்டில் ஏஞ்சல்ஸ் மெட்ரிக்குலேஷன் உயர் நிலைப்பள்ளியின் இன்ஸ்பெக்ஷனுக்காக மாவட்ட கல்வித்துறை ஆய்வாளர் மேல்வத்தூர் பாஸ்கரன் வருவதாக அறிவிக்கப் பட்டிருந்தது.காலை 10 மணிக்கு தலைமை ஆசிரியர் ராஜலிங்கம் ஆய்வாளர் வரும்போது எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று இரண்டு மூத்த ஆசிரியர்களுடன் ஆலோசித்துக் கொண்டிருந்தார். இருபத்தைந்து கி.மீ. தொலைவில் இருந்த மாவட்ட கல்வி ஆய்வாளர் அலுவலக கோப்புகளை எடுத்துக் கொண்டு ஜீப்பில் பள்ளிக் கூடத்தை அடைந்ததும் தலைமை ஆசிரியர் அவரை வரவேற்றார். பாஸ்கரன் விடு விடு என்று நடந்து ஐந்து நிமிடத்தில் பல வகுப்புக்களையும் தாண்டி நடந்தார். தலைமை ஆசிரியர் அறைக்குள் சென்றவுடன் மேல்வத்தூர் பாஸ்கரன் அவரிடம் கண்டிப்புடன் மிஸ்டர் ராஜலிங்கம் உங்க பள்ளி ரொம்ப மோசம் அதனால் பள்ளிக்கூடத்தைப் பூட்டிவிட நான் பரிந்துரை செய்யப் போகிறேன் என்றவுடன் ராஜலிங்கம் அதிர்ந்து விட்டார்.அவர் பாட்டுக்கு அதுக்கு அனுமதி இல்லை இதுக்கு அனுமதி இல்லை என்று பல பக்கங்கள் பேப்பரில் குறித்து வைத்திருந்தார். இதற்கு மேல் மொட்டைக் கடிதங்கள் வேறு. எவனோ ஒருத்தனுக்கு தோட்டக் காரன் வேலை பள்ளியில் கொடுக்கவில்லை என்ற கடுப்பில் தோட்டத்தைப் பற்றி ரிப்பொர்ட் செய்திருக்கிறான்.