ஆண்குறி மூன்று மெத்தை போன்ற இணை உருண்டைத் திசுக்கள் கொண்ட உறுப்பாகும். ஆண்குறியின் அடியில் ஓர் உருளைத்திசு அமைப்பும் மேல் பகுதியின் இரு திசு அமைப்புக்களும் உள்ளன. இவற்றின் இடையே சிறுநீர்க்குழாய் அமைந்திருக்கிறது. குறியானது விரைப்புத்தன்மை அடைந்த நிலையில் அடிப்புற உருளை ஒரே நேர்க்கோட்டில் இருப்பது போலத் தோன்றும். மெத்து மெத்தென்ற அமைப்பில் இரு புறமும் அமைந்துள்ளன.
இந்த மூன்று உருளைகளிலும் மெத்து மெத்தென்ற திசுக்கள் உள்ளன. அவற்றின் உள்ளே ஏராளமான நுண்ணிய ரத்தக்குழாய்கள் செல்கின்றன. கிளர்ச்சியுற்ற நிலையில் ரத்தம் நிறையப் பாய்வதால் திசுக்கள் உப்பி குறி விரைக்கிறது. குறி முழுவதும் ஓடும் ஏராளமான நரம்புகள் தொடவும், அழுத்தவும் படும்போது எளிதில் கிளர்ச்சியுறும் விதத்தில் அமைந்துள்ளது.
ஆண் குறியின் நுனி அல்லது தலைப்பகுதி நுரை மெத்தை போன்றது. இதில் ஏராளமான நரம்பு நுனிகள் உள்ளன. இது மிக உணர்வுள்ள பகுதி.
ஆண் குறியின் நடுப்பகுதியை விட தலையில் தான் உணர்வலைகள் மிகுதியாக இருக்கும். தலைக்கும் இடைப்பகுதிக்கும் இடையே உள்ள திசுக்களின் வளையமும் தலையோடு முன் தோலைக் கீழ்ப்பகுதியில் இணைக்கும் தோலும் மிக நுண்ணிய நரம்பு நுனிகளைக் கொண்டவை. இவற்றிலும் உணர்வலைகள் அதிகமாக இருக்கும்.
ஆண் குறியின் தலைப்பகுதியை நேரடியாகத் தூண்டுவதை விட நடுப்பகுதியை உராய்வதிலோ மேலும் கீழுமாக இழுப்பதிலோ தான் ஆண்கள் அதிக இன்ப உணர்வை அனுபவிக்கிறார்கள். தலைப்பகுதி நேரடியாகத் தூண்டப்படும் போது சில சமயம் வலயும், எரிச்சலும் ஏற்படும்.
ஆண் குறியின் மேல் தோல் மேலும் கீழும் நகரக் கூடியது. முன்தோலில் தொற்றுநோயோ, காயமோ இருந்தால் புணர்ச்சியின் போது வலி எடுக்கும் சிலருக்கு முன்தோல் கழன்று பின்னே போகாமல் வலி எடுக்கும். இதற்கு அறுவை சிகிச்சை உண்டு. ஆண்கள் தினமும் முன்தோலை நீக்கிக் குறியை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். சுன்னத் முறை மூலம் முன்தோலை நீக்கி விட்டால் இந்த வேலை சுலபமாகி விடும்.
முன் தோல் நீக்கும் இந்த அறுவை சிகிச்சையை யூதர்களும், முஸ்லீம்களும் செய்து கொள்கின்றனர். இது அந்த மதத்தினரின் தலைவரான ஆபிரகாம் கடவுளுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி நடப்பதாகக் கருத்து. அமெரிக்காவில் மதம் சம்பந்தப்பட்ட சடங்காக இது நடை பெறுவது கிடையாது. கனடா, மற்றும் ஐரோப்பாவில் இந்த முறை பிரபலம் அடையவில்லை. இந்த முறை சுகாதாரமானது.
காரணம், இதனால் தொற்றுநோய்கள் தாக்கும் வாய்ப்பு குறைகிறது. ஆனால் இதன் காரணமாக ஆண் குறியின் உணர்வாற்றல் குறைவதாகவும் சிலர் எண்ணுகின்றனர் என்பது ஒரு கருத்து. இதனால் நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட முடியும் என்பது இன்னொரு சாரர் கருத்து. ஆனால் இவை அனைத்தும் அறிவியல் அடிப்படையிலான உண்மைகள் அல்ல என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.