ஆந்திர பிரதேசத்தின் ஆழமான பகுதியிலுள்ள கிராமம் அது. அங்கு ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவள்தான் ம்ரிதுலா. கிராம வழக்கப்படி, ம்ரிதுலா வயதுக்கு வந்த செய்தி கோவில் புரோகிதருக்கு தெரியப்படுத்தப்பட்டது. கோவிலை நிர்வாகிக்கும் மற்ற பிராமணருக்கு அவர் தெரிவித்தார். அதன் பிறகு ஊரின் ‘பெரியோருக்கு’ அந்த செய்தி விக்கிரயம் செய்யப்பட்டது. ஆண்டாண்டு காலமாக பின்பற்றப்படும் வழக்கம் இது. அந்த ‘பெரியோர்’ எனப்படும் ஆறு,
ஏழு பேர் அந்த கிராமத்தையும் பக்க கிராமங்களையும் சுற்றியுள்ள நிலங்கள் அனைத்திற்கும் சொந்தக்காரர்களாக இருந்தமையால் அவ்வூர்களில் மிகுந்த செல்வாக்கைக் கொண்டிருந்தனர். அவர்களுக்குத் தெரியாமல் ஊரில் எதுவும் நடக்க இயலாது. அவர்களுக்குள் சில ஏற்ற தாழ்வுகள் இருந்தாலும் மொத்தத்தில் அந்த ‘பெரிய’வர்கள் யாவரும் ஓரளவு ஒற்றுமையாகவே இருந்தனர். அந்த கிராமங்களின் மீத மக்கள் அனைவரும் இவர்களுக்கு வேலை செய்யும் சேவையர்களே. கிட்டத்தட்ட அடிமைகள் என்று சொல்லலாம்.
ஜோகிணி (தேவதாசி) குலம் என்பது பரம்பரையில் வருவது என்று பலர் நினைப்பதுண்டு. இதுவும் உண்மைதான். ஆனால் சில சமயங்களில் வேறு குலத்தை சேர்ந்த பெண்களும் – முக்கியமாக, பொருளாதார பற்றாக்குறையுள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், அதுவும் அழகுள்ள இளம் பெண்கள் இந்த பட்டத்தை பெறுவர். கிராம மக்கள் எப்போதும் கோவில் பிராமணரின் கண்காணிப்பில் இருப்பர். முக்கியமாக, உடல் அழகுள்ள, வயதுக்கு வரப்போகின்ற பெண் பிள்ளைகள் குறிப்பில் வைக்கப்பட்டிருப்பார்கள். அப்பெண்கள் பரம்பரை ஜோகிணி குலத்தில் இல்லாதிருந்தாலும் அவர்களை வலையில் இழுப்பது அப்பிராமணர்களின் திறமையாகும். அதற்கு எத்தனையோ முறைகளை பயன் படுத்துவர். தங்கள் பெண் பிள்ளைக்கு ‘ஜோகிணி’ ஸ்தானம் கிட்டுவதில் பெற்றோர்கள் பெருமை கொள்வர். ஊரில் ஒரு பெண் சமைந்து விட்டால் உடனே அப்பெண்ணின் தாய், தகப்பன் கோவில் அர்ச்சகருக்கு அறிவித்து விடுவர். அப்பெண் ஜோகிணி குலத்தவளாக இருப்பின் அவளை கோவிலுக்கு அற்பணிக்கும் சடங்குக்கு நாள் பார்த்து அவளுடைய பெற்றோருக்கு அறிக்கை விடப்படும். இதை ‘முத்துக்கட்டும்’ சடங்கு என்பர். சிவப்பு முத்துக்களையும் வெள்ளை முத்துக்களையும் சாரமாகக் கோர்த்து அவள் கழுத்தில் ஊரிலுள்ள பெரியவர் ஒருவர் கட்டுவார். அதைக் கட்டுபவர் அவளை முதன்முதலாய் கற்பழிக்கும் தகுதியுடையவர். இந்த தகுதியைப் பெற சிறு போட்டி நடக்கும், அல்லது அவளுடைய கன்னித்திறையானது ஊரின் ‘பெரிய’வர்களிடம் ஏலம் விடப்படும். போட்டியில் ஜெயித்தவர் அல்லது ஏலத்தில் அதிக பணம் வைத்தவர் எவரோ அவருக்கு அந்த தகுதி கிட்டும். முதல் கற்பழிப்புக்குப்பின் அவர் அவளை தன் உடமையாக எத்தனை நாளும் பயன் படுத்தலாம். அதன் பின் அவள் கோவிலின் உடமையாவாள் – அதாவது, ‘சாமியின் மனைவி’ எனப்பட்டு, கடவுளின் அடியாராகிய கோவில் பிராமணர்கள் அனைவருக்கும் ‘சேவை’ செய்வாள். அவளின் சேவைகள் அவர்களுக்கு அலுத்தபின் அவள் பொதுமக்களுக்கு வேசியாவாள், அல்லது பெரிய பட்டணங்களில் உள்ள விலைமாதர் இல்லங்களுக்கு (brothels) விற்கப்படுவாள். முந்திய காலங்களில் முத்துக்கட்டும் சடங்கை கோவிலின் முதன்மை அர்ச்சகரே நடத்துவார்; அவரே அவளுடைய கன்னித்திறையை கிழிப்பவர். முதன்மை அர்ச்சகர் விரும்பினால் அந்த சிலாக்கியத்தை மற்ற அர்ச்சகரில் ஒருவருக்கு அளிப்பார். ஆனால் நாளடைவில் இவ்வழக்கத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டு, இத்தகைய கன்னிகளை முதலில் புணரும் தகுதியை ஊரில் செல்வாக்கும் செல்வமும் வலிமையும் மிகுந்தவர்கள் அடைந்தனர். ஊரிலுள்ள கன்னிகளின் கன்னி வாசலைத் திறக்கும் வய்ப்பை இழந்த கோவில் பிராமணருக்கு முதலில் சற்று ஏமாற்றமாய் இருந்தாலும் நாளடைவில் அந்த பற்றாக்குறை மழுங்கிவிட்டது. ஏனெனில் அவர்கள் கைவசம் ஏகப்பட்ட ஜோகிணிப் பெண்கள் எப்போதும் கோவில் மடத்தில் இருப்பார்கள்.