பிந்து நாளைக்கு என்ன பிளான் கேட்ட கபீரை பார்த்து உனக்கு ஏண்டா சொல்லணும் ஹே என்ன ரொம்ப சீன் போடறே பரீனா எங்களோட ஜாயின் பண்ணிப்பேன்னு கேட்டேன் எங்கலோடுனா யார் யார் என்றேன் அனுஷா லாரென்ஸ் நான் தான் வேறே யாரு இந்த உரையாடல் நடந்தது ஒரு கம்பனியின் காபினில் வெள்ளிகிழமை மாலை. மேலே கூறிய நான்கு பேரும் ஒரே டீம் ஆனா எனக்கு கபீர் மேலே ஒரு வெறுப்பு எப்போதுமே ஆனா அனுஷா லாரன்ஸ் என்று சொன்னதும் பொறாமை தோற்றி கொண்டது. அனுஷா எப்போ ரெஸ்ட் ரூம் போனாலும் என்னை வெறுப்பேத்திரா மாதிரி லாரன்ஸ் பத்தியே பேசுவா அவன் மேலே எனக்கு ஒரு கண் என்று தெரிந்தும். அவ அவன் கூட நாளைக்கு வெளியே போறானா நான் சும்மா இருப்பேனா உடனே கபீர் கிட்டே எங்கே போறீங்க நான் ப்ரீ தான் ஆனா நைட் ஸ்டே முடியாது என்றேன். கபீர் அட இந்த பொண்ணுங்க எல்லாமே ஒரே மாதிரி தான் அனுஷாவும் இஹையே தான் சொன்னா மகாப்ஸ் போகலாம்னு லாரன்ஸ் புதுசா கார் வாங்கி இருக்கானே அதுலே தான். நான் உடனே சரி வரேன்னு சொன்னேன்.