ஊர்: பிட்ஸ்பர்க், பென்சில்வேனியா, யூ.எஸ்.ஏ இடம்: என் ஹோட்டல் ரூம் நேரம்: அதிகாலை ஏழு மணி டெலிபோன் சத்தம் உச்சந்தலையில் சுத்தியலால் அறைந்தது போல இருக்க, நான் படக்கென்று விழித்துக் கொண்டேன். பிளாங்கெட்டை கொஞ்சம் தளர்த்தி ரிசீவரை எடுத்து காதில் வைத்துக் கொண்டேன். மேஹாதான் கால் செய்திருந்தாள். “Good Morning Ashok..!!” “Good Morning..!!” “இன்னும் தூங்கிட்டா இருக்குற…?”
நான் பதிலுக்கு பதிலாய் ஒரு கொட்டாவியை விட, அவள் புரிந்து கொண்டாள். “சோம்பேறி..!! சீக்கிரம் கெளம்புடா..!! எட்டு மணிக்கு ஆபீஸ்ல இருக்கணும்..!!” “ஓகே மேஹா…!! நான் ரீசவரை அதனிடத்தில் வைத்துவிட்டு மறுபடியும் பிளாங்கெட்டால் முகத்தை மூடிக்கொண்டேன். ஒரு இரண்டு நிமிடங்கள். பின்பு பரபரவென்று அவசரமாய் சுருட்டி கொண்டு எழுந்து, பாத்ரூமுக்குள் நுழைந்தேன். பிரெஷில் பேஸ்ட்டை பிதுக்கிக்கொண்டு படுவேகமாய் பல் தேய்க்க ஆரம்பித்தேன். நான் குளித்து கிளம்புமுன் என்னை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள். என் பெயர் அசோக். இந்தியாவிலேயே மிக முக்கியமான ஒரு ஐ.டி கம்பெனியில் சாப்ட்வேர் இஞ்சினியராக இருக்கிறேன். இப்போது ஆன்சைட் வந்து ஐந்து மாதங்கள் ஆகிறது. கை நிறைய சம்பளம். 24 வயதாகிறது. அப்பா எனக்கு கல்யாணத்துக்கு பெண் தேடலாமா என கேட்க ஆரம்பித்து விட்டார். நான் அவருக்கு எந்த பதிலும் சொல்லாமல், இப்போது குட் மார்னிங் சொன்னாளே அந்த மேஹாவை காதலித்துக் கொண்டிருக்கிறேன். அவளும்தான் என்னை காதலிக்கிறாள். மேஹா என்னுடைய டீம் லீடர். என்னை விட இரண்டு வயது மூத்தவள். மிகவும் அழகாக இருப்பாள். கொஞ்சம் ‘அருந்ததீ’ அனுஷ்காவின் சாயல். நல்ல உயரம். டெயிலி ஜிம்முக்கு போவாள். உடம்பை கட்டுக்கோப்பாக, வடிவாக வைத்திருப்பாள். ரொம்ப இன்டெலிஜென்ட். ரொம்ப போல்ட். கொஞ்சம் கோவக்காரி. கொஞ்சம் திமிர் பிடித்தவள். நான் இரண்டு வருடங்கள் முன்பு, எங்கள் கம்பெனியில் ப்ரெஷராக மேஹா டீமில் வந்து சேர்ந்தேன். மேஹாதான் எனக்கு மென்ட்டார். டெக்னிகல் விஷயங்களை எனக்கு கற்றுக் கொடுக்க வந்தவள், மெல்ல மெல்ல என் அழகில், பேச்சில் மயங்கி போனாள். ப்ளீஸ்..!! சிரிக்காதீங்க சார்..!! நான் நெஜமாவே பாக்குறதுக்கு கொஞ்சம் நல்லா இருப்பேன்..!! ஒரு வருடத்திற்கு முன்பு எனக்கு ஐ லவ் யூ சொன்னாள். எனக்கும் அதற்கு முன்பே மேஹாவை ரொம்ப பிடித்துப் போயிருந்தது. அதிகம் யோசிக்காமல் நானும் உடனே ஐ லவ் யூ சொன்னேன். இருவரும் ரகசியமாக சென்னையில் ஊர் சுற்றினோம். ஒரே ஆபீஸ்தானே..? அடிக்கடி சந்தித்து காதல் வளர்த்துக் கொண்டோம். இப்போது அயல்நாட்டிலும் ஆன்சைட் வந்த இடத்தில் காதல் வளர்த்துக் கொண்டிருக்கிறோம். ஆக்சுவலாக எனக்கு பதிலாக வேறு யாராவது ஆன்சைட் வந்திருக்க வேண்டும். என்னை விட திறமையான, அனுபவமான பலர் என் டீமில் உள்ளார்கள். மேஹாதான் பல கோல்மால் வேலை செய்து, என்னை ரெகமன்ட் செய்து, தன்னுடன் அழைத்து வந்திருக்கிறாள். இந்த விஷயத்தில் பலருக்கு என் மீது புகைச்சல். இங்கு யூ.எஸ்ஸில் ஒரே ஹோட்டலில் வேறு வேறு ரூமில் தங்கியிருக்கிறோம். தினமும் ஒன்றாக ஆபீஸ் செல்வோம். ஒன்றாக திரும்பி வருவோம். லீவு நாட்களில் அமெரிக்கா சுற்றுவோம். அவ்வப்போது உதட்டுமுத்தம் கொடுத்துக் கொள்வோம். சரி.. அது கிடக்கிறது.. இப்போது..
நான் குளித்து முடித்திருந்தேன். ஷர்ட்டை டக் இன் செய்து பெல்ட் மாட்டிக் கொண்டிருந்தபோது காலிங் பெல் அடித்தது. நான் சென்று கதவை திறந்தேன். மேஹா உதட்டில் புன்னகையுடன் நின்றிருந்தாள். அம்சமாக ஒரு பிசினஸ் சூட்டில், ரொம்ப ரிச்சாக காட்சியளித்தாள். அந்த அதிகாலை அமெரிக்க குளிரில், அப்போதுதான் பூத்த மலர் போல ப்ரெஷாக இருந்தாள். நான் இன்னும் ரெடியாகாமல் இருப்பதை பார்த்து லேசாக எரிச்சலுற்றாள். “இன்னுமா ரெடியாகலை நீ…?” “இதோ.. அவ்வளவுதான் மேஹா.. ஜஸ்ட் ஷூ மாட்டனும்.. அவ்வளவுதான்..!!” நான் சொல்லிவிட்டு ஷூ ஸ்டாண்டில் இருந்து ஷூவை எடுத்துக் கொண்டேன். சோபாவில் சென்று அமர்ந்தேன். ஷூ மாட்டிக் கொள்ள ஆரம்பித்தேன். மேஹா எனக்கு அருகில், வாசமாய் வந்து அமர்ந்தாள். நான் ஷூ மாட்டிக்கொண்டு அவளை ஏறிட, அவள் என்னையே, என் முகத்தையே காதலாக பார்த்துக் கொண்டிருந்தாள். “என்ன மேஹா..? அப்படி பாக்குற..?” “ம்ம்.. இன்னைக்கு நீ ரொம்ப ஹேண்ட்சமா இருக்குறடா..!! இந்த ஷர்ட் உனக்கு நல்லாருக்கு..!!” “ஓஹோ..!! ம்ம்.. தேங்க்ஸ்..!!” சொல்லிவிட்டு நான் எழ முயல, அவள் என் கையை பிடித்து இழுத்து, மீண்டும் சோபாவில் அமர வைத்தாள். “எங்க போற..? உக்காரு..!!” என்று ஒருமாதிரி கம்மலான குரலில் சொன்னாள். “ஆபீசுக்கு டைம் ஆகலை..?” “போலாம்.. இரு…!!” சொன்ன மேஹா தன் வலது கையை எடுத்து என் கன்னத்தில் வைத்தாள். மெல்ல தடவினாள். பின்பு என் முகத்தை நோக்கி குனிந்தாள். தன் செவ்விதழ்களை எனது உதடுகளோடு பொருத்திக் கொண்டாள். என் கன்னத்தை தடவிக் கொண்டே, மென்மையாக, நிதானமாக, காதலாக என் உதடுகளை சுவைத்தாள். நான் மிக ஆர்வமாக, ஆவலுடன் ஒத்துழைத்துக் கொண்டிருந்தேன். அவள் சுவைப்பதற்கு வசதியாக என் உதடுகளை லேசாக பிளந்து வைத்தக் கொண்டேன். மேஹாவுக்கு பவளம் போன்ற சிவப்பான இதழ்கள். இப்போது லிப்ஸ்டிக் வேறு பூசிக்கொண்டு செக்கசேவேலென்று இருந்தன. மெல்லிய உதடுகள்தான், பிளந்து கொண்ட ஆரஞ்சு சுளை மாதிரி. மேஹாவின் முகத்தை பார்க்கும் யாருமே அவளுக்கு மிகவும் ஈரமான உதடுகள் என்று எளிதில் சொல்லிவிட முடியும். ஆனால் அந்த உதட்டு ஈரத்தின் சுவை எனக்கு மட்டுந்தான் தெரியும். தேனை போல தித்திப்பு.. கள்ளை போல கிறுகிறுப்பு..