அப்பாவின் சிநேகிதர் என்றதும் அசோகமிதரனின் கதை என்று நினைச்சிடாதீங்க. இது என் அப்பாவோட பிசினஸ் பார்ட்னர்- திவாகர் பத்தின கதை.திவாகர் சாருக்கு வயசு 34- 35 இருக்கும். ஆனால் இந்த வயசிலேயே பெரிய பிசினஸ் மேன் ஆயிட்டார். அப்பா கொஞ்சம் பணம் முதலீடு செஞ்சு அவர்கூட பார்ட்னர் ஆயிட்டார். பிசினஸ் நல்லா போகுது. திவாகர் MBA படிச்சவர்.கொஞ்ச நாள் வட இந்தியாவுல இருந்தாராம். நல்ல ஜாலி டைப். எப்பவும் கேலி, கிண்டல் தான். அவர் வீட்டுக்கு வந்தாலே நேரம் போறதே தெரியாது. ஆளு பார்க்க நல்லா அழகா இருப்பார். மாநிறம். நல்ல உயரம். திடமான உடம்பு.