பள்ளி விளையாட்டு துறை ஆசிரியை ஆன எனக்கு கைநிறைய சம்பாதித்தும் மன நிறைவு இல்லை. காதலிக்கும் போது சமர்த்தாக தெரிந்த காதலன், திருமணம் முடிந்த பிறகு சாமர்த்தியமாக தெரியவில்லை. இலக்கை அடையும் வரை தான் இன்பம். அதற்கு பிறகு இலக்குகள் மாறும் போது அடைந்த இலக்கை அனுபவிக்க துன்பமாக மாறி விடுகிறது. வாழ்க்கை போராட்டத்தில் வாழ மறந்த விட்டில் பூச்சிகளாக பறந்து கொண்டு இருக்கிறோம். கணவன் வேறொரு ஊரில் ஆசிரியராக வேலை பார்க்க, நான் ஒரு ஊரில் என்று எதற்கு உழைக்குறோம் என்று தெரியாமலேயே ஓடிக் கொண்டிருக்கிறோம்.
வார விடுமுறையில் சந்தித்து கொண்டாலும் அடுத்த வார தேவைகளும், அவசர கடமைகளும், தேவைகளும் மட்டும் முன் நின்று எங்கள் காதலையும் காமத்தையும் பொசுக்கி விடுகிறது. வாழ்க்கையும் அனைத்தும் இப்படித்தான் ஆரம்பத்தில் ஜீரணிக்க முடியாமல் பிறகு அதுவே பழகிப்போய் விடுகிறது. மனதை திசைதிருப்ப இன்று தோழிகள் பல வழிமுறைகளை சொல்கிறார்கள்.
புத்தகம் படி, இணையத்தில் உலாவி உல்லாச புரியை உணர்ந்து அனுபவி, வயசு வித்தியாசம் இல்லாமல் சேட்டிங்கில் சேட்டைகள் பண்ணு, இனிமே லைஃப் இப்படித்தான் நமக்கு என்ன தேவையோ புலம்புவதை விட, தேடி எடுத்துக் கொள்ள வேண்டியது தான். ஆனால் அப்படி தேட தடுமாறிய போது தான் சுபாஷ் எங்கள் பள்ளி விளையாட்டு துறைக்கு புதிதாக வந்தான். அவன் முகத்தில் புன்னகையும், உடலில் புத்துணர்ச்சியும் பரவ அவன் வந்த பிறகு எங்கள் விளையாட்டு துறையே புத்துயிர் பெற்றதை போல் உணர்ந்தேன். ஒரு வேளை அது எனக்குள் ஏற்ற மாற்றங்களாக இருக்கலாம்.
நான் ஆர்வமே இல்லாமல் தான் பள்ளி விளையாட்டுத் துறையில் பணிபுரிந்து வந்தேன். ஆனால் அது மாணவர்களின் எதிர்கால கனவு, வாழ்க்கை, லட்சியம் என்பதெல்லாம் சுபாஷ் வந்து சொல்லி புரியவைத்த பிறகு தான் என் மண்டையில் உறைத்தது. அடுத்த கணமே வயசு வித்தியாசமில்லாமல் “சொல்லுங்க சுபாஷ் நான் என்ன பண்ணனும்? என்று கேட்டு சுபாஷிடம் சரணடைந்தேன். சுபாஷ் கட்டளைப்படி, பல்வேறு விளையாட்டு பிரிவில் எனது அனுபவத்தில் எங்கள் பள்ளி மாணவ, மாணவியரின் பட்டியலை நான் தயாரித்து கொடுத்து அவர்களை சுபாஷ் முன் நிறுத்தினேன்.
அவர்களுக்கு முறையான பயற்சி அளித்து மாவட்ட அளவில் பல்வேறு பிரிவில் அவர்களை வெற்றி பெற வைத்து, அவர்களையும் பள்ளியையும் பெருமைபடுத்தினார். ஆனால் சுபாஷ் அந்த வெற்றியில் தன்னை மட்டும் முன்னிருத்தாமல் என்னையும் இணைத்து கொண்ட போது தான் என்னை அறியாமல் சுபாஷிடம் காதல் கொண்டேன். அன்பொழுக பேசினேன், சுபாஷின் ஆதரவு மற்றும் அணைப்பிற்கு ஏங்கினேன். ஸ்கூல் போகவே எரிச்சல் பட்ட நான், இப்போது சுபாஷுக்காக என்னை அலங்கரித்து கொண்டு அழகாக போக ஆரம்பித்தேன். முடிந்து போனதோ வாழ்க்கை என்று முனகி கொண்டிருந்த எனக்கு இப்போது புதிதாக பிறந்த்து போல் ஒரு உணர்வு.