சிங்கப்பூர் செல்லும் அந்த விமானத்தில் ஜன்னல் ஓர சீட்டில் அமர்ந்திருந்தேன். நான் அந்த சமயத்தில் ஒரு வெளி நாட்டு வாழ் இந்தியன் என்ற உரிமை பெற்று இருந்தேன். அதன் படி, இந்தியாவிற்குள் அந்த ஆண்டில் நான் அனுமதிக்கப்பட்ட நாட்களை விட கூட இருக்கும் நிலை ஏற்பட்டதால், என் விடுமுறை நாடகளை சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, பர்மா, என்று சுற்றி, ஒரு மாதத்தையும் கழிக்க முடிவு செய்து, பயணமானேன். என் பக்கத்தில், ஒரு நடுத்தர, பெண்மணியும் அவளை அடுத்து, ஒரு இளம் மங்கையும் வந்து அமர்ந்தார்கள்.