ஆனா சுயநலம் கொஞ்சம் கூட இல்லாத காவேரி அக்காவோட வாழ்க்கை ஏன் இப்படி சூன்யமா போச்சுங்கிற சூட்சமம் இப்போ வரைக்கும் எங்களுக்கு புரியவே இல்ல. நாங்க பஜார்ல ரொம்ப பரபரப்பா வியாபாரம் நடந்த ரெடிமேட் ஷோரூம்ல தான் வேலை பார்த்தோம். கடையோட அமைப்பு, இன்டீரியர் டிசைனை பார்த்தவங்க மீண்டும் கடைக்குள்ள வராம போக மாட்டாங்க. அதே போலத்தான் எங்க கடை துணிகளும், தரமும்.
காலேஜ் படிச்சு முடிச்ச ரெண்டு பணக்கார வாலிபர்கள் தான் பார்ட்னரா சேர்ந்து எங்க கடையை நடத்தினாங்க. அவங்களுக்கு ரெடிமேட் வியாபாரத்துல பெரிய அனுபவம் இல்லாட்டியும் ரொம்ப திறமையா கவனத்தோடு எங்க ஏரியா மக்களுக்கு ஏத்த மாதிரி தரம், விலையை நிர்ணயம் பண்ணி வீட்டுக்கு வீடு நல்ல விளம்பரம் பண்ணி கடையை ஆறு மாசத்துல பெரிய அளவுல வெற்றிகரமா நடத்த ஆரம்பிச்சுட்டாங்க. அதுக்கப்புறம் டாப் கியர் போட்ட மாதிரி வியாபாரமும், வசூலும் நிக்கவே இல்ல. பணம் அருவியா கொட்ட ஆரம்பிச்சுது.
அதேப் போல் வேலை பார்த்த எங்களுக்கும் நல்ல சம்பளம், போனஸ், டெய்லி பேட்டா எல்லாம் கிடைச்சுது. எல்லோரும் ஹாப்பியா வேலை பார்த்தோம். ஆரம்பத்திலே இருந்தே காவேரி அக்கா தான் எங்களுக்கு சூப்பர் வைசர் மாதிரி நல்லா டிரெயினிங் கொடுத்து கஸ்டமரை எப்படி அன்பா பேசி கவர் பண்ணனும். கடைக்குள்ள நுழைஞ்ச யாரும் துணி வாங்காம வெறும் கையோட போயிடக் கூடாது அப்படினு சேல்ஸ் கேர்ள்ஸ் எங்களை ரொம்பவே ஊக்கப்படுத்தி கடை வியாபாரத்துக்கு ரொம்பவே ஹெல்ப் பண்ணாங்க.
ஓனர்கள் ரெண்டு பேரும் வியபாரம் பெருக பெருக அடிக்கடி பர்சேஸ் டூர்னு வெளியூருக்கு போய் ஊர் சுத்த ஆரம்பிச்சாங்க. அவங்க இல்லாமலேயே நாங்க காவேரி அக்கா நிர்வாகத்துல சூப்பரா கடைய நடத்தினாலும் ஊருக்கு போனவங்க ஓனர் பசங்க ரெண்டு பேரும் அடிக்கடி பணத்தை பேங்க்ல போடச் சொல்லி அங்கே ஏடிஎம்ல எடுத்து செலவு பண்ண ஆரம்பிச்சாங்க. முதல்ல எங்களுக்கு அவங்க ஏதோ பர்சேஸ் தேவைக்கு தான் பணம் கேட்குறாங்கனு நினைச்சு கேட்கும் போதெல்லாம் பணத்தை ஓனர்ஸ் அக்கவுன்ட்ல பணத்தை போட்டோம்.
ஆனா இங்கே முக்கியமான ஸ்டாக் தீர்ந்து போயும் எந்த சரக்கும் கடைக்கு வரலை. ஓனர்கள் முதல்ல டெய்லி அவங்களே போன் போட்டு பேசினவங்க அப்புறம் நாங்க கூப்பிட்டா கூட ஸ்விட் ஆஃப் இல்லேனா நாட் ரீச்சபிள் வர ஆரம்பிச்சுது. காவேரி அக்கா ரொம்பவே மூட் அவுட் ஆகிட்டாங்க. அப்புறம் ஓனர்களே கூப்பிட்டப்போ ஸ்டாக் இல்லாததை சொன்னப்போ ஆர்டர் போட்றுக்கோம். வந்திடும். ஆனா பர்சேஸுக்கு தான் பணம் பத்தலை. சேல்ஸ் ஆகிறதை எங்க அக்கவுன்ட்ல போடுங்க என்று சொன்னதையே திரும்ப திரும்ப சொன்ன போது காவேரி அக்கா உட்பட எங்களுக்கும் சந்தேகம் வர ஆரம்பித்தது.
அதற்கு பிறகு ஓனர்கள் ஊருக்கு திரும்பினாலும் ஸ்டாக் இல்லாமல் வியாபாரம் கொஞ்சம் டல் அடிக்க ஆரம்பித்தது. ஏற்கனவே ஸ்டாக் சப்ளை செய்த துணி கம்பெனி காரர்கள் நேரடியாக பணம் கேட்டு வர ஓனர்கள் மீண்டும் கடைக்கு வராமல் எஸ்கேப் ஆக ஆரம்பித்தார்கள். நாங்கள் பதில் சொல்ல முடியவில்லை. சில ஆட்கள் எங்கள் முகத்தை பார்த்தும், வியாபாரம் இன்னும் நடப்பதை நம்பியும் திரும்பி போனார்கள். அதற்கு பிறகு காவேரி அக்கா எங்களை அழைத்து ஒரு மீட்டிங் போட்டாள். அதில் கம்பெனி நிலவரம் சரி இல்லை. இந்த மாதம் கடை செலவு க சம்பளத்துக்கே பணம் பற்றாக்குறையாக இருக்கிறது.